tamilnadu

img

அமெரிக்கா ஆய்வாளர்கள் : இன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரை கண்டுபிடிப்பு

ஊசியாக போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உருவாக்கி அமெரிக்கா ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

உலகம் முழுவதும் முதல் தர சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை கட்டப்படுத்த நாள்தோறும் ஒருமுறையோ, இருமுறையோ இன்சுலின் ஊசி எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஆய்வாளர்களின் புதிய முயற்சியால் ஊசிக்கு பதில் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக்கல்வி நிறுவன ஆய்வாளர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரையை பன்றிக்கு கொடுத்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையின் அளவு 30 மி.மீ நீளத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

;